Book REview on Eternally Talented India-108 Facts | Gandhi Study Centre

February 7, 2020

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் பேசுபவர்: செல்வி எஸ்.கஸ்தூரி, புத்தகம்: “Eternally Talented India-108 Facts”
(ஒரு தொகுப்பு நூல்) வெளியீடு: இராமகிருஷ்ண மடம்,

பேச்சாளர் பற்றி:
செல்வி எஸ்.கஸ்தூரி அவர்கள் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். செயல் ஊக்கம் கொண்ட பல இளம் தலைமுறையினரை உருவாக்கும் பணியினை பல ஆண்டுகளாக செய்து வரும் “யுவசக்தி” என்ற தன்னார்வ இளையோர் அமைப்பின் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்.

நூல் பற்றி:
ஒவ்வொரு நாடும் உலகிற்கு தன் பங்காக அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை, தத்துவம், ஆன்மிகம், கணிதம், தொழில், வணிகம், தொழில்நுட்பம் என பல துறைகள் சார்ந்து பங்காற்றியுள்ளன. அதே போன்று இந்திய தேசம் அதன் பங்களிப்பாக எவற்றையெல்லாம், பல்வேறு துறைகள் சார்ந்து இந்த உலகிற்கு அளித்துள்ளது என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்? அவ்வாறு இவ்வுலகிற்கான இந்தியாவின் பங்களிப்புகள் குறித்த தேடலும், அதன் மூலம் கண்டடைந்த விடைகளின் தொகுப்பே இந்நூல். ஹைதராபாத்திலுள்ள இராமகிருஷ்ண மடம் இந்நூலை மிக உயர்ந்த தரத்துடன் வெளியிட்டுள்ளது.

இடம்:
காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600 017.

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: