Book review on The Insider | P. V. Narasimha Rao | Gandhi Study Centre | பி.வி.நரசிம்ம ராவ்

February 5, 2020

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் பேசுபவர்: திரு. பொன்னியின் செல்வன் , புத்தகம்: “The Insider” ஆசிரியர்: பி.வி.நரசிம்ம ராவ் முதல் இந்தியப் பிரதமர் | Former Prime Minister of India P. V. Narasimha Rao

நூல் பற்றி:
நூலாசிரியர் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள் தன் சுய அரசியல் வரலாற்றை புனைவாக மாற்றி நாவலாக தந்திருக்கிறார். ஆந்திர அரசியலில் தான் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், பின்னர் இந்திராகாந்தி அவர்களின் தலைமையில் தேசிய அரசியலில் நுழைந்தது முதல் அன்றைய இந்திய அரசியல் சூழல், இந்திரா காந்தி அவர்களின் மரணம், அதற்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் மற்றும் தான் சாட்சியாக இருந்த அரசியல் சூழ்நிலைகள் என நிஜ அரசியல் வரலாற்றை புனைவிலக்கியமாக இந்நூலில் அவர் வடித்துள்ளார்.

ஆசிரியர் பற்றி:
நூலாசிரியர் மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள் ஒரு பல்மொழி அறிஞர். இந்தியாவின் 9-வது பிரதமராக இருந்தவர். இந்தியாவை ஆட்சி செய்த பிரதமர்களில் முதல் தென்னிந்தியர். கலப்புப் பொருளாதார முறையிலிருந்து சந்தைப் பொருளாதார முறைக்கு இந்தியாவை மடை மாற்றியவர்.

இடம்: காந்தி கல்வி நிலையம், தக்கர் பாபா வித்யாலயா வளாகம், 58 வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை – 600

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: